Monday, July 9, 2012

Tamil Photoshop

Vector ஃபோட்டோஷொப் தமிழ் டியூட்டோரியல் – Tamil Photoshop


தேவையான அளவில் வேர்க் ஏரியாவை உருவாக்கி கொள்ளவும்… பக்ரவுண்ட் கறுப்பு… ( நான் 800*800 // 72 எடுத்துள்ளேன்… )
Ctrl + N
அடுத்து… “L” (Polygonal lasso tool) ஐ செலக்ட் பண்ணி படத்தில் உள்ளவாறு… அல்லது உங்களுக்கு பிடித்தவாறு கீறி கலர் பண்ணிக்கொள்ளவும்… ( நான் கறுப்பு கொடுத்துள்ளேன்.. ) ( கலர்க்கு Ctrl + Back KEY அல்லது  Alt + Back KEY இலகுவானது:))
அந்த லேயரில் டபிள் கிளிக் பண்ணி… Layer style  போய் Outer glow கொடுக்கவும்…
அடுத்து இப்போ கீறிய லேயரை கொப்பி லேயர் பண்ணவும்… நிறத்தையும் மாற்றவும் பொருத்தமானவாறு… ( நான் கருமையான நீலம் கொடுத்துள்ளேன்.. ) (கொப்பி பண்ணப்பட்டது முதல் கீறிய லேயருக்கு கீளே போடப்பட வேண்டும். )
அடுத்து… Edit -> Transform -> Warp ஐ கிளிக் பண்ணவும்…
மூளைப்பக்கங்களை எழுத்து படத்தில் காட்ட பட்டவாறு செய்துகொள்ளவும்… 3D தோற்றம் ஏற்பட்டிருக்கும்..
இதே போன்றே மேலும் சில கோடுகளை தனித்தனி லேயர்களில் போட்டு வர்ணம் தீட்டிக்கொள்ளவும். ( வேறு வேறு வர்ணங்கள் கொடுக்கவும்…:)
லேயர்களை டபிள் கிளிக் பண்ணி… Layer Style இல் Drop Shadow கொடுத்துக்கொள்ளவும்…
( பக்ரவுண் கறுப்பு என்பதால் வித்தியாசம் தெரியாது இப்பொழுது…:)
அடுத்து அனைத்து லேயர்களுக்கும் கீளே ஒரு லேயரைப்போடவும்… ( அதாவது, பக்ரவுண் லேயருக்கு மேலாக மட்டும்… )
அதில் அதே “L” ஐ கிளிக் பண்ணி… படத்தில் காட்ட பட்டவாறு கீறி… வேறு வேறு கலர் கொடுத்துக்கொள்ளவும்…:)
அடுத்து அனைத்துக்கும் மேலாக ஒரு லேயரைப்போடவும்… “B” (Bursh tool) ஐ கிளிக் பண்ணவும்… மேலே இருக்கும் Opacity ஐ குறைத்துக்கொள்ளவும்.
இப்போது ஏற்கனவே டிசைன் பண்ணிய உருக்களுக்கு மேலாக படத்தில் காட்டப்பட்ட வாறு பிறஸ் பண்ணவும்…
( பிறஸ் ஸைஸ் மாற்றி மாற்றி பண்ணவும் அப்போதுதான் அழகாக இருக்கும்..:))
கடைசியில்… இப்போது இப்படி இருக்கனும்…:)
——————————————————————————————
நீங்கள் மேலும் மெருகூட்டிக்கொள்ளலாம்…
நான் செய்தது இதுதான்…:)

உணவை சேமித்து வாழும் ஒட்டகம்! (camel)

உணவை சேமித்து வாழும் ஒட்டகம்! (camel)


ஒட்டகம்(camel) என்றவுடன் பாலைவனமும் (desert) சேர்த்துத்தான் அனைவருக்கும் நினைவுவரும்.
அந்த ஒட்டகத்தைப்பற்றித்தான் இங்கு பார்க்கப்போகிறீர்கள். பாலைவனத்தை வாழ்விடமாகக்கொண்டு வாழும் இந்த மிருகங்களிடம் இருக்கும் விசேடதிறன் என்றால், உணவு நீர் இன்றி நீண்ட காலத்திற்கு இவைகளால் வாழமுடிகின்றது.
ஆம், அவற்றின் முதுகில் இருக்கும் கட்டி போன்ற அமைப்பிற்குள் பல நாட்களுக்குத்தேவையான கொழுப்பை சேமித்துவைத்துக்கொள்கின்றது. அத்துடன் வயிற்றினுள் சுமார் 4 லீட்டருக்கு மேலான நீரை சேமித்துவைத்துக்கொள்கிறது. தமக்கு இரை தேவைப்படும் போது அவற்றை செமிபாட்டிற்கு அனுப்பும் திறன் இவ் ஒட்டகங்களிடம் இயற்கையாகக்காணப்படுகின்றது.
ஒட்டகங்களின் கண் இமைகளைப்பார்த்தீர்களானால் நீண்டு அழகாக இருக்கும்.
இதற்கான காரணம், மணல் புயல்கள் நிறைந்த பாலைவனத்தில் அவை பயணிக்கும் போது அவற்றின் கண்களை தூசுகள்/ மணல்கள் பாதிக்காமல் இருப்பதற்காகவாகும்.
அவற்றின் காதுகளில் இருக்கும் அடர்த்தியான முடிகளும் தூசுகள் காதுக்குள் செல்வதை தடுப்பதற்காகத்தான்.
ஒட்டகங்களின் மூக்கை அவதானித்துப்பாருங்கள் இரு புறமும் அமைந்திருப்பதுடன் சவ்வு போன்ற அமைப்பானதாக இருக்கும். இவை கூட அவற்றின் சுவாசத்தில் மணல் துகள்கள் இடையூறு செய்வதை தடுப்பதற்காகத்தான்.
ஒட்டகங்களின் கால்களை அவதானித்துப்பாருங்கள். அடிப்பகுதி தட்டையானதாக அமைந்திருக்கும். காரணம் மணலினுள் புதைவதை தடுப்பதற்காகவே!
By : Chandra  Pirabu (207)

அறிவியல்

குடிதண்ணீர் கொண்டுவர ஒரு புதிய டெக்னாலஜி

19/05/2012 mr.alshan king
நல்ல குடிநீர் இல்லாமல் உலகமுழுக்க பல மில்லியன் மக்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கும் ஆப்பிரிக்க மக்களுக்கு குறிப்பாக கெனோரி தீவிற்கு கீரீன்லாந்திலிருந்து தண்ணீர் கொண்டுவரும் ஒரு மெகா திட்டம் பிரெஞ்சு பொறியாளர் ஒருவருக்கு உதித்தது. அவர் பெயர் ஜியோர்ஸ் மெளஜின்.
பெரிய ஐஸ் பாளங்களை போலார் (ஆர்டிக்) பகுதியில் இருந்து சக்திவாய்ந்த இழுவைப்படகு மூலம் இழுத்து கொண்டு வருவது தான் திட்டம். அதாவது பெரிய ஐஸ் பாளங்களை (Iceberge) க்ரீன்லேன்டிலிருந்து ஆப்பிரிக்க வடமேற்கு கடற்பகுதியில் உள்ள கெனேரி தீவிற்கு 140 நாட்களுக்குள் கொண்டுவருவது. இதனால் இப்பகுதியின் 35,000 மக்கள் பயன் பெருவார்கள்.
சரி திட்டத்தை செயற்படுத்துவது எப்படி ?. கம்யூட்டர் சிமுலேசன் மூலமாக 7 மிலியன் டன் எடையுள்ள பெரிய ஐஸ் பாளங்களை கொண்டுவர முடியும் என கணக்கிட்டார்.
இந்த புராஜக்டிலுள்ள சிரமங்கள் :
கட்டி இழுத்து வரும் போது ஐஸ்பாளங்கள் உருகி பல துண்டுகளாக சிதறலாம், புயல் மற்றும் 200 அடி உயர அலைகள் வரலாம். அடுத்து செலவு.
40 அடி உயர இன்சுலேட்டின் உறையால் ஐஸ்பாளத்தை சுற்றி போர்த்தி கடலுனுள்ளாக கொண்டுவருவது இதனால் வேக மாக உருகுவது தடுக்கப்படும். இதற்காண செலவு 11.5 மிலியன் டாலர்கள் 35000 பேர் ஒருவருடம் குடிநீர் உபயோகிக்கலாம் என்கிறார் மெளஜின்.

திட்டம் இன்னும் செயல் படுத்தப்படவில்லை.