Vector ஃபோட்டோஷொப் தமிழ் டியூட்டோரியல் – Tamil Photoshop
தேவையான அளவில் வேர்க் ஏரியாவை உருவாக்கி கொள்ளவும்… பக்ரவுண்ட் கறுப்பு… ( நான் 800*800 // 72 எடுத்துள்ளேன்… )
Ctrl + N
Ctrl + N
அடுத்து… “L” (Polygonal lasso tool) ஐ செலக்ட் பண்ணி படத்தில் உள்ளவாறு… அல்லது உங்களுக்கு பிடித்தவாறு கீறி கலர் பண்ணிக்கொள்ளவும்… ( நான் கறுப்பு கொடுத்துள்ளேன்.. ) ( கலர்க்கு Ctrl + Back KEY அல்லது Alt + Back KEY இலகுவானது)
அந்த லேயரில் டபிள் கிளிக் பண்ணி… Layer style போய் Outer glow கொடுக்கவும்…
அடுத்து இப்போ கீறிய லேயரை கொப்பி லேயர் பண்ணவும்… நிறத்தையும் மாற்றவும் பொருத்தமானவாறு… ( நான் கருமையான நீலம் கொடுத்துள்ளேன்.. ) (கொப்பி பண்ணப்பட்டது முதல் கீறிய லேயருக்கு கீளே போடப்பட வேண்டும். )
அடுத்து… Edit -> Transform -> Warp ஐ கிளிக் பண்ணவும்…
மூளைப்பக்கங்களை எழுத்து படத்தில் காட்ட பட்டவாறு செய்துகொள்ளவும்… 3D தோற்றம் ஏற்பட்டிருக்கும்..
இதே போன்றே மேலும் சில கோடுகளை தனித்தனி லேயர்களில் போட்டு வர்ணம் தீட்டிக்கொள்ளவும். ( வேறு வேறு வர்ணங்கள் கொடுக்கவும்…
லேயர்களை டபிள் கிளிக் பண்ணி… Layer Style இல் Drop Shadow கொடுத்துக்கொள்ளவும்…
( பக்ரவுண் கறுப்பு என்பதால் வித்தியாசம் தெரியாது இப்பொழுது…
அடுத்து அனைத்து லேயர்களுக்கும் கீளே ஒரு லேயரைப்போடவும்… ( அதாவது, பக்ரவுண் லேயருக்கு மேலாக மட்டும்… )
அதில் அதே “L” ஐ கிளிக் பண்ணி… படத்தில் காட்ட பட்டவாறு கீறி… வேறு வேறு கலர் கொடுத்துக்கொள்ளவும்…
அடுத்து அனைத்துக்கும் மேலாக ஒரு லேயரைப்போடவும்… “B” (Bursh tool) ஐ கிளிக் பண்ணவும்… மேலே இருக்கும் Opacity ஐ குறைத்துக்கொள்ளவும்.
இப்போது ஏற்கனவே டிசைன் பண்ணிய உருக்களுக்கு மேலாக படத்தில் காட்டப்பட்ட வாறு பிறஸ் பண்ணவும்…
( பிறஸ் ஸைஸ் மாற்றி மாற்றி பண்ணவும் அப்போதுதான் அழகாக இருக்கும்..)
——————————————————————————————
No comments:
Post a Comment