Monday, July 9, 2012

அறிவியல்

குடிதண்ணீர் கொண்டுவர ஒரு புதிய டெக்னாலஜி

19/05/2012 mr.alshan king
நல்ல குடிநீர் இல்லாமல் உலகமுழுக்க பல மில்லியன் மக்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கும் ஆப்பிரிக்க மக்களுக்கு குறிப்பாக கெனோரி தீவிற்கு கீரீன்லாந்திலிருந்து தண்ணீர் கொண்டுவரும் ஒரு மெகா திட்டம் பிரெஞ்சு பொறியாளர் ஒருவருக்கு உதித்தது. அவர் பெயர் ஜியோர்ஸ் மெளஜின்.
பெரிய ஐஸ் பாளங்களை போலார் (ஆர்டிக்) பகுதியில் இருந்து சக்திவாய்ந்த இழுவைப்படகு மூலம் இழுத்து கொண்டு வருவது தான் திட்டம். அதாவது பெரிய ஐஸ் பாளங்களை (Iceberge) க்ரீன்லேன்டிலிருந்து ஆப்பிரிக்க வடமேற்கு கடற்பகுதியில் உள்ள கெனேரி தீவிற்கு 140 நாட்களுக்குள் கொண்டுவருவது. இதனால் இப்பகுதியின் 35,000 மக்கள் பயன் பெருவார்கள்.
சரி திட்டத்தை செயற்படுத்துவது எப்படி ?. கம்யூட்டர் சிமுலேசன் மூலமாக 7 மிலியன் டன் எடையுள்ள பெரிய ஐஸ் பாளங்களை கொண்டுவர முடியும் என கணக்கிட்டார்.
இந்த புராஜக்டிலுள்ள சிரமங்கள் :
கட்டி இழுத்து வரும் போது ஐஸ்பாளங்கள் உருகி பல துண்டுகளாக சிதறலாம், புயல் மற்றும் 200 அடி உயர அலைகள் வரலாம். அடுத்து செலவு.
40 அடி உயர இன்சுலேட்டின் உறையால் ஐஸ்பாளத்தை சுற்றி போர்த்தி கடலுனுள்ளாக கொண்டுவருவது இதனால் வேக மாக உருகுவது தடுக்கப்படும். இதற்காண செலவு 11.5 மிலியன் டாலர்கள் 35000 பேர் ஒருவருடம் குடிநீர் உபயோகிக்கலாம் என்கிறார் மெளஜின்.

திட்டம் இன்னும் செயல் படுத்தப்படவில்லை.

No comments:

Post a Comment